கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடிகர் துல்கர் சல்மானின் நண்பன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டுகளை பெற்றவர் பிரபல விஜய் டிவி தொகுப்பாளர் ரக்ஷன்.
தற்போது ராகோ. யோகேந்திரன் இயக்கத்தில் ரக்ஷன் ஹீரோவாக நடித்துள்ள படம் மறக்குமா நெஞ்சம்.
இந்த படத்தில் தீனா, ஸ்வேதா வேணுகோபால், மலினா, பிராங்க்ஸ்டர் ராகுல் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இப்படத்தை ஃபிலியா என்டர்டெயின்மென்ட் மற்றும் குவியம் மீடியா வொர்க்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. சச்சின் வாரியர் இசையமைத்துள்ளார், தாமரை பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
இந்த படம் கடந்த ஆண்டே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஏதோ சில காரணத்தினால் வெளியாக வில்லை. தற்போது இந்த படம் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2 மாதங்களுக்கு முன்பே இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இன்று (ஜனவரி 27) இந்த படத்தின் புதிய டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. பள்ளி பருவத்தில் ஏற்படும் காதல், பிரிவு, நட்பு, ரீ யூனியன் என அனைத்து எமோஷன்களும் கலந்த ஓர் யூத் ஃபுல் படமாக மறக்குமா நெஞ்சம் உருவாகியுள்ளது.
இந்த படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
எழில் 25: தேசிங்கு ராஜா 2 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் : புறப்படும் முன் சொன்னது என்ன?
