மாநிலங்களவை எம்பி சீட்.. எடப்பாடி பழனிசாமியுடன் தேமுதிக சுதீஷ் சந்திப்பு

Published On:

| By Minnambalam Desk

AIADMK DMDK

தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை எம்பி சீட் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த அக்கட்சியின் பொருளாளர் சுதீஷ் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Rajya Sabha MP Seat

தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை எம்பி இடங்களுக்கு ஜூன் 19-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் 4 வேட்பாளர்களை திமுக ஏற்கனவே அறிவித்துவிட்டது.

அதிமுகவின் 2 மாநிலங்களவை வேட்பாளர்கள் தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

2024 மக்களவைத் தேர்தலின் போது தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை எம்பி இடம் தருவதாக அதிமுக உறுதியளித்தது என்கிறார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா. ஆனால் அப்படி எல்லாம் எந்த உறுதியும் தரப்படவில்லை என்பது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கருத்து.

மேலும் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை எம்பி சீட் தருவது அதிமுகவின் கடமை எனவும் பிரேமலதா வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தேமுதிக பொருளாளர் சுதீஷ் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை எம்பி சீட் தர வேண்டும் என சுதீஷ் வலியுறுத்தியதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share