தமிழ்நாட்டில் காலியாகும் 6 இடங்களுக்கு ஜூன் 19-ந் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. Rதமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை (ராஜ்யசபா) எம்.பி.க்களாக உள்ள திமுக வழக்கறிஞர் வில்சன், தொமுச தலைவர் சண்முகம், புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக ஆதரவுடன் எம்.பி.யான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுகவின் சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ந் தேதியுடன் நிறைவடைகிறது.

இதனையடுத்து இந்த 6 எம்பி பதவி இடங்களுக்கு ஜூன் 19-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.ajya Sabha Elections for 6 Seats
மாநிலங்களவைத் தேர்தல் அட்டவணை
வேட்பு மனுத் தாக்கல்- ஜூன் 2
வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள்- ஜூன் 9
வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை- ஜூன் 10
வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் ஜூன் 12
தேர்தல் நடைபெறும் நாள்- ஜூன் 19
வாக்கு எண்ணிக்கை- ஜூன் 19 மாலை 5 மணிக்கு தொடக்கம்