மாநிலங்களவை தேர்தலில் திமுக மற்றும் அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த ஆறு பேரின் வேட்புமனுக்களும் இன்று (ஜூன் 10) ஏற்கப்பட்டுள்ளது. rajya sabha election dmk aiadmk candidates
தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல், வரும் ஜூன் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன், கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா, கூட்டணி கட்சியான மநீம தலைவர் கமல்ஹாசன் மற்றும் அதிமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் தனபால் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மேலும், 7 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்தநிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. ஒரு வேட்பாளரை 10 சட்டமன்ற உறுப்பினர்கள் முன்மொழிய வேண்டும். அந்தவகையில் 7 சுயேட்சை வேட்பாளர்களும் 10 எம்.எல்.ஏ-க்கள் கையொப்பம் இல்லாமல் வேட்புமனு தாக்கல் செய்ததால், அவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்து, திமுக, அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆறு வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வாகின்றனர். ஜூன் 12-ஆம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுவை திரும்ப பெற்றுக்கொள்ள அவகாசம் உள்ளது. ஜூன் 12 அன்று ஆறு பேருக்கும் அவர்கள் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டதற்கான வெற்றி சான்றிதழ் அளிக்கப்படும். rajya sabha election dmk aiadmk candidates