எம்பி தேர்தல்… ஸ்டாலின் யோசித்த விஜய் “Factor”

Published On:

| By Minnambalam Desk

Rajya Sabha Election 2026

திமுகவின் மாநிலங்களவை எம்பி வேட்பாளர் பட்டியலில் அக்கட்சியின் மூத்த வழக்கறிஞர் பி.வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. Rajya Sabha Election 2026:

2019-ம் ஆண்டு மாநிலங்களவை எம்பியான பி.வில்சன், 2-வது முறையாக எம்பியாகக் கூடும் அல்லது தமிழக அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்படலாம் என கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின், பி. வில்சனுக்கு 2-வது முறையாக மாநிலங்களவை எம்பி வாய்ப்பை தந்துள்ளார்.

அண்மையில் தமிழக ஆளுநர் ரவிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இந்த வழக்கில் தமிழக அரசுக்காக வாதாடியவர்களில் வில்சனும் ஒருவர். தற்போதும் மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசின் வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இருக்கின்றன. இதனால் வில்சன் டெல்லியில் இருக்க வேண்டும் என நினைக்கிறாராம்; அதனால்தான் மீண்டும் வாய்ப்பு தந்துள்ளார் ஸ்டாலின் என நாம் மின்னம்பலத்தில் எழுதி இருந்தோம்.

அத்துடன் 2026 மக்களவைத் தேர்தலில் கிறிஸ்தவர்கள் ஆதரவைத் தக்க வைக்க, கிறிஸ்தவரான வில்சனுக்கு 2-வது முறை வாய்ப்பு கொடுத்துள்ளது திமுக எனவும் எழுதி இருந்தோம்.

மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் ஒரு கிறிஸ்தவர். விஜய் பக்கம் கிறிஸ்தவர்கள் சாய்வதைத் தடுக்கும் வகையிலும் கிறிஸ்தவரான வில்சனுக்கு மீண்டும் ஸ்டாலின் வாய்ப்பு கொடுத்துள்ளார் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share