குக்கூ,ஜோக்கர், ஜிப்ஸி போன்ற நல்ல படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் ராஜூ முருகன்.
தற்போது இவரது இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் ஒரு வித்தியாசமான கேங்ஸ்டர் கதைக் களத்தில் உருவாகியுள்ள படம் “ஜப்பான்”. ஏற்கனவே ஜப்பான் படத்தின் Glimpse வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்திற்காக நடிகர் கார்த்தி தனது வழக்கமான உடல் மொழி, குரல் என அனைத்தையும் மாற்றி அந்தக் கதாபாத்திரமாகவே உருமாறி நடித்திருக்கிறார். வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ள ஜப்பான் படத்தின் இறுதிக் கட்ட பணிகள் வேக வேகமாக நடந்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இயக்குனர் ராஜூ முருகனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. ஆனால் அந்த படத்தை அவர் இயக்கப் போவதில்லை.
அதற்கு பதிலாக குட் நைட், பாயும் ஒளி நீ எனக்கு, மாறா போன்ற படங்களுக்கு டிஸ்ட்ரிபியூஷன் செய்த எஸ்.பி. சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து ராஜூ முருகன் அந்த படத்தை தயாரிக்க உள்ளார்.
ராஜூ முருகன் தயாரிக்கப் போகும் இந்த புதுப் படத்தை அறிமுக இயக்குனர் எழில் இயக்கப் போகிறார். சீன் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைக்க, பாடல்களை உமாதேவி எழுத இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்திற்கான நடிகர்கள் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது, விரைவில் இந்த படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…