விஜய்யின் தவெக மாநாடு வெற்றியடைந்துள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் இன்று(அக்டோபர் 31) தெரிவித்துள்ளார்.
கடந்த 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சித் தலைவர் விஜய், பாஜக மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்துகிறது, மற்றும் திமுக ஊழல் கட்சி என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிற நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் வீட்டிற்கு வெளியே காத்திருந்த ரசிகர்களை சந்தித்தார்.
இந்த சந்திப்பில், “அனைவருக்கும் என்னுடைய தீபாவளி நல்வாழ்த்துக்கள். எல்லோரும் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக, மற்றும் சந்தோஷமாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.
அவரிடம், நடிப்பு துறையிலிருந்து அரசியலுக்கு வந்திருக்கும் விஜய், சமீபத்தில் நடத்திய மாநாடு பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு “மாநாடு மிகப் பெரிய வெற்றியடைந்திருக்கிறது. விஜய்க்கு என்னுடைய வாழ்த்துகள்.” என்று ரஜினிகாந்த் பதிலளித்தார்.
மேலும் மாநாட்டில் விஜய் பேசியது குறித்த கேள்விக்கு, சிரித்தபடியே கையெடுத்து கும்பிட்டு பதிலளிக்காமல் வீட்டுக்குள் சென்றுவிட்டார்.
ரஜினிகாந்த் ஏறத்தாழ 25 வருஷங்களாகத் தான் அரசியலுக்கு வரப்போவதாகச் சொல்லிக்கொண்டு இருந்தார். ஆனால் கடந்த 2020 வருடம், தன் உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தினால், இனி அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை என்று அறிவித்தது இங்குக் குறிப்பிடத்தக்கது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….வ்
‘அமரன்’ படகுழுவினரை வாழ்த்திய முதலமைச்சர் ஸ்டாலின்
60,000 நெருங்கிய தங்கம் விலை….இதற்கு ஒரு எண்டே இல்லையா?
போக்குவரத்துக் கழகத்தில் 2,877 காலி பணியிடங்களை நிரப்ப உத்தரவு!