கிச்சன் கீர்த்தனா: ராஜ்மா பனீர் கறி!

Published On:

| By Kavi

Rajma Paneer Curry Recipe

இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து நிறைந்தது இந்த ராஜ்மா பனீர் கறி. சுவையான சைடிஷான இதில் போலேட், மக்னீசியம், கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருப்பதால், அனைவரும் சாப்பிடலாம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், பனீர் குறைவாகவும் ராஜ்மா அதிகமாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

என்ன தேவை? Rajma Paneer Curry Recipe

ராஜ்மா – ஒன்றரை கப் நறுக்கப்பட்ட பனீர் -150 கிராம்

வெங்காயம் – 2 (நடுத்தரமான அளவில்)

தக்காளி – 2

இஞ்சி – பூண்டு பேஸ்ட் – இரண்டு டீஸ்பூன்

மஞ்சள் பொடி – அரை டீஸ்பூன்

மிளகாய்ப் பொடி -அரை டீஸ்பூன்

மல்லிப்பொடி – ஒரு டீஸ்பூன்

சீரகப்பொடி – அரை டீஸ்பூன்

கரம் மசாலா – கால் டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – மூன்று டேபிள்ஸ்பூன்

எப்படிச் செய்வது? Rajma Paneer Curry Recipe

இரவே ராஜ்மாவை ஊறவைக்க வேண்டும். ஊறிய ராஜ்மாவைத் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். கடாயில் சிறிதளவு எண்ணெய்விட்டு, நறுக்கிய வெங்காயம், சீரகப்பொடி சேர்த்து, இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பின்னர், இஞ்சிப்பூண்டு பேஸ்ட் சேர்த்து, பேஸ்ட் பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும். பிறகு, தக்காளி, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி. மல்லித்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

கடைசியாக பனீர் துண்டுகள் மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, வேகவைத்த ராஜ்மா மற்றும் கரம் மசாலாவைக் கடாயில் போட்டு மிதமான சூட்டில் 10 நிமிடங்கள் வரை வேகவைக்கவும். இந்த ராஜ்மா பன்னீர் கறியை வேகவைத்த அரிசி சாதம் அல்லது பராத்தா, ரொட்டி போன்றவற்றுடன் சேர்த்துச் சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share