முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்தநாளையொட்டி டெல்லியிலுள்ள அவரது நினைவிடத்தில் ராகுல் காந்தி இன்று (ஆகஸ்ட் 20) மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதனையடுத்து புது டெல்லியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு சென்ற அவரது மகனும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று காலை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், கொட்டும் மழையில் நனைந்தபடி ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, “அப்பா, நீங்கள் இரக்கமுள்ள ஆளுமை, தோழமை மற்றும் நல்லெண்ணத்தின் உருவகம்.
உங்கள் போதனைகள் எனக்கு உத்வேகம், மற்றும் இந்தியாவுக்கான உங்கள் கனவுகள் என்னுடையது – நான் அவற்றை நிறைவேற்றுவேன், உங்கள் நினைவுகளை என்னுடன் எடுத்துச் செல்கிறேன்” என உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் இன்று அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினரும் ராஜீவ் காந்தியின் உருவப் படத்தை வாகனங்களில் அலங்கரித்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கொண்டாடவும்,
அப்போது ராஜீவ் ஆட்சியில் நடந்த சாதனைகளை துண்டுப் பிரசுரங்களாக விநியோகிக்கவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வேலைவாய்ப்பு: திருச்சி என்ஐடியில் பணி!
மலையாள திரையுலகில் பாலியல் துன்புறுத்தல்கள் : ஹேமா கமிஷன் அறிக்கையால் அதிர்ச்சி!