தலைவர் 170… ரஜினியின் ஸ்டைல் வணக்கம்: வைரல் புகைப்படம்!

Published On:

| By Monisha

rajinikanth's thalaivar 170 look viral

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக சுபாஸ்கரன் தயாரிக்கும் படம் தலைவர் 170.

கடந்த சில தினங்களாகவே தலைவர் 170 படத்தில் இணைந்துள்ள நடிகர்கள் குறித்த அப்டேட்களை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து வந்தது.

ADVERTISEMENT

அதன் பிறகு அக் 4ஆம் தேதி தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் தொடங்கியது என பட பூஜை நிகழ்ச்சி புகைப்படங்களை லைகா நிறுவனம் வெளியிட்டது. அந்த புகைப்படங்களில் ரஜினியின் கெட்டப் செம மாஸாக இருந்தது.

ADVERTISEMENT

நேற்று விஜய்யின் லியோ ட்ரெய்லர் வெளியாகி சோஷியல் மீடியாவை தன் கட்டுப்பாட்டில் எடுத்திருந்தாலும், இன்று வரை சோஷியல் மீடியாவில் ரஜினியின் தலைவர் 170 அப்டேட்ஸும் டிரெண்டாகி கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில், தற்போது தலைவர் 170 படப்பிடிப்பில் இருந்து ரஜினியின் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

ADVERTISEMENT

காரில் இருந்து சன் ரூஃப் வழியாக ரசிகர்களை பார்த்து தன் சிக்னேச்சர் ஸ்டைலில் வணக்கம் சொல்கிறார் ரஜினி. தற்போது இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

தலைவர் 170 படத்தின் டைட்டில் “வேட்டையன்” என்று சமூக வலைத்தளங்களில் சில தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் கூடிய விரைவில் தலைவர் 170 பட டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் வெளியான அதிர்ச்சி தகவல்!

படைப்பை குணாவுக்கு பாஜகவில் புதிய பதவி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share