இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் “லால் சலாம்” படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் லால் சலாம் படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு லால் சலாம் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினி நடித்துள்ளார். ரஜினி வரும் காட்சிகள் 20 நிமிடங்கள் தான் படத்தில் இடம்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் லால் சலாம் படத்தின் சில காட்சிகள் டெலீட் ஆகிவிட்டதாக தகவல் வெளியாகி சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் நடிகர் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது வரும் நவம்பர் 12ஆம் தேதி காலை 10.45 மணிக்கு லால் சலாம் படத்தின் டீசர் வெளியாகும் என்று லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சனாதன தர்மத்தை விமர்சிக்க எனக்கு உரிமை உள்ளது: ஆ.ராசா வாதம்!
பிக்பாஸ் வீட்டுக்குள்ள நான் மறுபடி போகணும்னா… கண்டிஷன் போடும் பிரதீப்!