மகள்  தயாரித்த படத்தை பார்த்து ரசித்த ரஜினிகாந்த்

Published On:

| By Kavi

மகள் சவுந்தர்யா தயாரித்த வித் லவ் படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்து பாராட்டியுள்ளார். 

டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷேன் ஜீவிந்த் நாயகனாக அறிமுகமாகும் ‘வித் லவ் திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ADVERTISEMENT

அபிஷன் ஜீவிந்திற்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார்.  சௌந்தர்யா ரஜினிகாந்தின் ‘சியான் பிலிம்ஸ்’ மற்றும் எம்.ஆர்.பி என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரித்துள்ளது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

காதலர் தினத்தை முன்னிட்டு வரும் பிப்ரவரி 6ஆம் தேதி படம் வெளியாகவுள்ளது. 

ADVERTISEMENT

இந்தநிலையில் படத்துக்கு இன்று யு சான்றிதழ் வழங்கியுள்ளது மத்திய திரைப்பட தணிக்கை வாரியம். 

இந்தசூழலில் இன்று (பிப்ரவரி 3) சென்னையில் உள்ள சத்யம் சினிமாவில்  இப்படத்தின் ப்ரீமியர் ஷோ ஒளிபரப்பப்பட்டது. 

ADVERTISEMENT

இதை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவிவருகிறது.

அதோடு,  அபிஷனை “ஹீரோ மெட்டீரியல்” என்று பாராட்டியதுடன், அவர் திரையில் மிகச் சிறப்பாகத் தெரிவதாகவும் ரஜினி கூறியிருக்கிறார். 

தனது மகள் சௌந்தர்யா மற்றும் படக்குழுவினருக்கும் வாழ்த்து கூறியுள்ளார். 

முன்னதாக இந்த படத்தில் நடித்தது குறித்து பேசிய அபிஷன்,  “என் நன்றி அனைத்தும் ரஜினி​காந்த் சாருக்கு தான். நான் நடிக்​கலா​மா? என்ற சந்​தேகம் எனக்​குள் இருந்த சமயத்தில், அவர் என்னை வீட்​டுக்கு அழைத்​தார். அப்​போது அவர், ‘நீ நடி கண்​ணா’ என்று ஊக்கமளித்தார். அந்த வார்த்​தை​யிலேயே என் எல்லா தயக்​க​மும் உடைந்துவிட்டது” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share