ரஜினி நடித்துள்ள வேட்டையன் படத்தின் டிரெய்லர் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு இன்று (செப்டம்பர் 30) அறிவித்துள்ளது.
த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத், மும்பை, திருவனந்தபுரம், சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.
கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி வேட்டையன் படத்தின் ஆடியோ லாஞ்ச் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்தப்பட்டது. அன்றைய தினமே, வேட்டையன் டீசர் வெளியானது. டீசரில் ரஜினி மிகவும் ஸ்டைலான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். என்கவுன்ட்டர் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படத்தின் கதைக்களமானது அமைக்கப்பட்டிருக்கிறது.
அமிதாப் பச்சனுக்கு பிரகாஷ் ராஜ் டப் செய்தது விமர்சனத்திற்குள்ளானது. பலரும் பிரகாஷ் ராஜ் குரல், அமிதாப்பச்சனுக்கு செட் ஆகவில்லை என்று சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட்டனர். இதனையடுத்து அமிதாப் பச்சன் குரல் ஏஐ மூலம் ஆல்டர் செய்யப்பட்டது.
இந்தநிலையில், வேட்டையன் படத்தின் டிரெய்லர் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாகும் என்று லைகா புரொடக்ஷன்ஸ் இன்று அறிவித்துள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாளுக்கு நாள் வேட்டையன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வீரபாண்டியாரின் வளர்ப்பு… ஸ்டாலின் தோழன்… இப்போது அமைச்சர்- யார் இந்த வக்கீல் ராஜேந்திரன்?
அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர் – கோரிக்கை ஏற்க மறுப்பு!