நடிகர் ரஜினிகாந்த் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று (ஜூலை 1) சாமி தரிசனம் மேற்கொண்டார்.
நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கிரிக்கெட் கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்தில் கவுரவ வேடத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் ரஜினிகாந்த் இன்று காலை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுப்பதற்காக ரசிகர்கள் சூழ்ந்தனர். காவல்துறை மற்றும் பவுன்சர்கள் ரஜினிகாந்தை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

திருவண்ணாமலை கோவிலில் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
செல்வம்
