ரஜினியின் “MASS” லுக்..! தலைவர் 170 பூஜை போட்டோஸ்..!

Published On:

| By christopher

rajinikanth thalaivar 170 pooja

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெய் பீம் பட இயக்குனர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக சுபாஸ்கரன் தயாரிக்கும் படம் தலைவர் 170.

கடந்த சில நாட்களாகவே தலைவர் 170 படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த விவரங்களை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்து வந்தது.

ADVERTISEMENT

லைக்காவின் அறிவிப்பின்படி தற்போது வரை தலைவர் 170 படத்தில் அமிதாப் பச்சன்,ராணா டகுபதி, பகத் பாசில்,மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் என அனைத்து மொழி முன்னணி நடிகர்களும் இணைந்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், கருப்பு கண்ணாடியுடன் ரஜினிகாந்த் ஸ்டைலாக போஸ் கொடுக்கும்  புகைப்படத்தை வெளியிட்டு, இன்று (அக்டோபர் 4- ஆம் தேதி) படப்பிடிப்பு தொடங்குகிறது என லைக்கா நிறுவனம் அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது திருவனந்தபுரத்தில் எளிமையான முறையில் சிறப்பான பூஜைக்குப் பிறகு தலைவர் 170 படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தலைவர் 170 பட பூஜையில் எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை லைக்கா நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

அந்த புகைப்படத்தில் ரஜினியின் கெட்டப் செம மாஸ் ஆக உள்ளது. இதில் மற்றொரு சிறப்பான விஷயம் என்னவென்றால் விஜய் டிவி புகழ் தொகுப்பாளர் ரக்சனும் தலைவர் 170 படத்தில் நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.

தலைவர் 170 பட பூஜை நிகழ்ச்சியின் புகைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இயக்குனர் ஞானவேல், நடிகை மஞ்சு வாரியர், சார்பட்டா பட புகழ் நடிகர் சுந்தர், விஜய் டிவி புகழ் தொகுப்பாளர் ரக்சன், ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். கதிர், லைக்கா புரொடக்ஷன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஜி.கே.எம் தமிழ் குமரன் ஆகியோர் புகைப்படத்தில் இடம் பெற்றுள்ளனர்.

Image

ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஒரு பான் இந்தியா ஹிட் கொடுக்க ரஜினி தயாராகி விட்டார் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டனர்.

மேலும் தலைவர் 170 படத்தின் டைட்டில் “வேட்டையன்” என்று சில தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. ஆனால் அது அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல.

தற்போது படப்பிடிப்பு தொடங்கி விட்டதால், கூடிய விரைவில் தலைவர் 170 படத்தின் டைட்டில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டிஜிட்டல் திண்ணை: சந்திக்க மறுத்த மோடி, அமித் ஷா… அண்ணாமலைக்கு டெல்லி போட்ட ஆர்டர்-  நடக்குமா நடைப் பயணம்?

இடைநிலை, பகுதிநேர, டெட் ஆசிரியர்களுக்கு அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share