பிள்ளை போல கவனித்துக் கொண்ட வேலு: மின்னம்பலம் செய்தியை உறுதிப்படுத்திய ரஜினி

Published On:

| By Selvam

Rajinikanth share his experience

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ புத்தக வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆகஸ்ட் 24) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் புத்தகத்தின் முதல் பிரதியை முதல்வர் ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். விழாவில் ரஜினிகாந்த், திமுகவின் சீனியர் தலைவர்களை ஸ்டாலின் டீல் பண்ணும் விதம் குறித்து பேசும்போது அங்கிருந்த அனைவரும் குலுங்கி குலுங்கி சிரித்தனர்.

தொடர்ந்து லால் சலாம் படப்பிடிப் பிற்காக திருவண்ணாமலைக்கு சென்றபோது, அமைச்சர் வேலு தன்னை கவனித்துக்கொண்ட விதம் குறித்து பேசினார்.

Rajinikanth share his experience

ரஜினி இன்று வெளிப்படையாக பேசிய விஷயங்களை, கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி கலைஞர் பற்றி அமைச்சர் வேலுவிடம் கண் கலங்கிய ரஜினி என்ற தலைப்பில் நாம் அப்படியே வெளியிட்டிருந்தோம்.

அன்று மின்னம்பலம் வெளியிட்ட செய்தியை  ரஜினி இன்று வெளிப்படையாக  பேசியிருக்கிறார்.

ரஜினி பேசியபோது,  “இந்த விழாவின் உண்மையான நாயகன் எ.வ.வேலு. எனக்கு அவரைப் பற்றி பெரிதாக தெரியாது.

திருவண்ணாமலையில் லால் சலாம் படப்பிடிப்பின் போது மூன்று முறை அங்கே சென்றிருந்தேன். அங்கு எ.வ.வேலுவின் காலேஜ் கெஸ்ட் ஹவுஸில் கலைஞர் தங்குவதற்காக ஒரு சூட் இருக்கிறது. சி.எம் சென்றால் கூட அங்கு தான் தங்குவார். நானும் அந்த கெஸ்ட் ஹவுஸில் தான் தங்கினேன்.

என்னை ஒரு சொந்தப்பிள்ளை மாதிரி பார்த்துக்கொண்டார்கள். வேலுவின் மகன் அருகில் இருந்து என்னை கவனித்துக்கொண்டார்.

அந்த காலேஜ் கிளீனாகவும் டிசிப்ளினாகவும் இருக்கும். நிறைய மாணவர்கள் படித்தாலும் ஒரு சத்தம் வராது. நான் அங்கு இருந்தபோது யாருமே என்னை டிஸ்டர்ப் செய்யவில்லை. நீங்கள் நிச்சயமாக அந்த காலேஜுக்கு சென்று பார்க்க வேண்டும்.

அங்கு ஒரு சமையல்காரர் செய்த மீன் குழம்பைப் போல வாழ்க்கையில் நான் சாப்பிட்டதே கிடையாது. ‘ஐயா மீன் குழம்பு சாப்பிடுவாரா?’ என்று அவரிடம் கேட்டேன். ‘அவர் சாப்பிடமாட்டார்’ என்று சொன்னார். கடும் ஏழையை விட மோசமாக சாப்பிடுகிறார் வேலு. அதனால் தான் உடல்நலன் நன்றாக இருக்கிறது.

வேலு இரண்டு முறை என்னை நேரில் சந்தித்தார். ‘ரஜினி நல்லா இருக்கிறாரா? என்று சி.எம். தொடர்ந்து விசாரித்துக்கொண்டு இருக்கிறார்’ என்று வேலு சொன்னார். ‘இதைவிட என்ன வேண்டும்.. சிறப்பாக கவனிக்கிறீர்கள்’ என்று அவரிடம் சொன்னேன். இப்படி என்னை அருமையாக பார்த்துக்கொண்ட வேலுவுக்கு என்ன கைமாறு செய்யப் போகிறோம் என்று புரியாமல் திகைத்தேன்.

Rajinikanth share his experience

ஒருநாள் உங்களை பார்க்க வேண்டும் என்று வேலு சொன்னார். விழா என்று சொன்னால் நான் கொஞ்சம் அவாய்ட் பண்ணுவேன். அப்போது இந்த புத்தக வெளியீடு குறித்து சொன்னார். இந்தப் புத்தகம் ரொம்ப நாள் முன்பே  எழுதிவிட்டேன். கலைஞர் தான் இந்த புத்தகத்தின் தலைப்பை செலக்ட் செய்தார் என்றும் சொன்னார். உடனே புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதாக அவரிடம் சம்மதம் தெரிவித்தேன்.

இந்த புத்தகத்தின் வடிவைப்பு மற்றும் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள படங்கள் மிகவும் அருமையாக இருக்கிறது. புத்தகத்தின் முன்னுரையை சி.எம் மிக அருமையாக எழுதியிருக்கிறார். ஆனால், விலை தான் கொஞ்சம் அதிகம் 1000 ரூபாய். அதனால் விலையை கொஞ்சம் குறைத்து விற்பனை செய்ய வேண்டும். அனைவரும் இந்த புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும்

கலைஞர் நினைவு மண்டபத்தை தாஜ்மஹால் போல வேலு கட்டியிருக்கிறார். அதேபோல கலைஞர் பிறந்த ஊரான திருவாரூரில் கலைஞர் கோட்டத்தை கட்டியிருக்கிறார். அப்படி எந்த வேலை கொடுத்தாலும் கச்சிதமாக செய்யக்கூடியவர் வேலு” என்று ரஜினிகாந்த் பேசினார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பாடாய்ப்படுத்தும் சீனியர்கள்… அசால்டாக சமாளிக்கும் ஸ்டாலின்… ரஜினி கலாய்! 

‘கலைஞர் எனும் தாய்’ புத்தகத்தை எழுதியது ஏன்? – அமைச்சர் வேலு சொன்ன காரணம்!

விஜயகாந்துக்கு நேர்ந்தது போல சம்பவம்… நாகர்ஜூனாவின் கல்யாண மண்டபம் இடிப்பு!

தொடங்கிய முருகன் மாநாடு : கருவறைக்குள் பாகுபாடு கூடாது : முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share