ADVERTISEMENT

‘படத்துக்கு படம் ஆச்சரியப்படுத்துகிறீர்கள்’ : மாரி செல்வராஜை பாராட்டிய ரஜினிகாந்த்

Published On:

| By Kavi

பைசன் படம் நன்றாக இருப்பதாக கூறி நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் கடந்த 17ஆம் தேதி வெளியான படம் ‘பைசன்’. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் என பலர் நடித்துள்ளனர்.

ADVERTISEMENT

ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது பைசன்.

இந்தநிலையில் பைசன் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் மாரி செல்வராஜை தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார்.

ADVERTISEMENT

இதனை மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிந்துள்ளார். அதில், ‘’சூப்பர் மாரி சூப்பர்… பைசன் பார்த்தேன், படத்துக்கு படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியபடுத்துகிறது மாரி வாழ்த்துக்கள் ‘ -சூப்பர் ஸ்டார்.

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை பார்த்துவிட்டு என்னை அழைத்து பாராட்டியது போலவே எனது ஐந்தாவது படமான பைசன் (காளமாடன்) பார்த்துவிட்டு என்னையும் ரஞ்சித் அண்ணனையும் தொலைபேசியில் அழைத்து மனதார பாராட்டிய சூப்பர் ஸ்டாருக்கு என் சார்பாகவும் என் மொத்த படக்குழு சார்பாகவும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share