பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இன்று (மே 7) அதிகாலை இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். rajinikanth praise modi operation for sindoor
கடந்த மாதம் பஹல்காம் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக சரியாக 15 நாட்களுக்கு பிறகு இந்திய ராணுவம், ‘ஆப்ரேசன் சிந்தூர்’ என்ற பெயரில் இன்று அதிகாலை பதில் தாக்குதல் நடத்தியுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப்படையின் துல்லிய தாக்குதல் நடந்துள்ளது.
இந்த நிலையில் இந்த தாக்குதல் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், “ஒரு போராளியின் சண்டை தொடங்கியுள்ளது. இலக்கு நிறைவேறும் வரை சண்டையை நிறுத்த வேண்டாம்! பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களே, முழு நாடும் உங்களுடன் உள்ளது. ஜெய்ஹிந்த்!” என ரஜினி தெரிவித்துள்ளார்.
அவரைத்தொடர்ந்து இந்திய திரையுலகைக் சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.