லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது படத்தின் டைட்டில் வெளியாகி இருக்கிறது.
ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் நடிப்பில் தலைவர் 171 படமும், ஜெயிலர் 2 படமும் உருவாகவிருக்கிறது.
இந்தநிலையில் லோகேஷ்-ரஜினி படத்தின் டைட்டில் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு கூலி என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள படத்தின் டைட்டில் டீசரில் ஒரு கேங்ஸ்டர் ஏரியாவிற்குள் ரஜினி நுழைந்து, அங்குள்ள அனைவரையும் அடித்துத் துவம்சம் செய்கிறார்.
அனிருத் இசையில் டிஸ்கோ டிஸ்கோ என பின்னணியில் ஒலிக்க, வசனங்கள் பேசி ரஜினி தெறிக்க விடுகிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஜெயிலர் படம் போல மீண்டும் ஒரு சம்பவம் உறுதி என்று, மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.
https://twitter.com/AyyoEdits/status/1782389175058112664
தங்கக்கட்டிகள் டீசர் முழுவதும் வருவதால், படம் கடத்தல் பின்னணியை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுவது உறுதியாகி உள்ளது.
லியோ படத்தில் பிளடி ஸ்வீட் மற்றும் விக்ரம் படத்தில் ஆரம்பிக்கலாங்களா கேப்ஷன்கள் போல இதில் முடிச்சிடலாமா? என்ற கேப்ஷனை லோகேஷ் வைத்துள்ளார்.
இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு முன்னெப்போதையும் விட, ரசிகர்கள் மத்தியில் வெகுவாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழுக்கு வரும் ‘குண்டூர் காரம்’ ஹீரோயின்… ஹீரோ யாருன்னு பாருங்க!
‘புஷ்பா 2’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்?
RCB vs KKR: சேர்க்கை தான் சரியில்ல… மீம்ஸ் போட்டு ஆறுதல் தேடும் ரசிகர்கள்!