இந்தியா முழுவதும் இன்று (நவம்பர் 12) தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து சமூகவலைதளங்களிலும் தீபாவளி வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை போயஸ் கார்டனில் தனது வீட்டின் முன் குவிந்த ரசிகர்களை நேரில் சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்துகள் கூறினார்.
தீபாவளி தலைவர் தரிசனம் அனைவரும் வாருங்கள் தலைவர் தரிசனத்தை கொண்டாடுங்கள்🤘❤🔥#Thalaivar #Rajinikanth #Superstar #MahaavatarBabaji #kriyayogam pic.twitter.com/3diPGrCFBv
— Sathish🤘💥 (@Sathish8151) November 11, 2023
நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினிகாந்தை பட்டு வேட்டி சட்டையில் கண்ட அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்து கோஷங்களை எழுப்பினர்.
மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் லால் சலாம் படத்தின் டீசர் இன்று காலை வெளியாகி இருக்கிறது.
https://t.co/8Fhuv4qZt8#LalSalaam @ash_rajinikanth @arrahman pic.twitter.com/I0sn73oniI
— Rajinikanth (@rajinikanth) November 12, 2023
இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் ஒரு வீடியோவையும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், “அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள், வரும் பொங்கல் அன்று லால் சலாம் படத்தில் உங்களை சந்திக்கிறேன். மொய்தீன் பாய் Khuda Hafiz!” என ஸ்டைலாக தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோருடன் மொய்தீன் பாயாக நடித்துள்ள ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தின் டீசர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் டீசரில், “விளையாட்டில் கூட மதத்த கலந்துருக்கீங்க… குழந்தைங்க மனசுல கூட விஷத்த கலந்துருக்கீங்க’ என்ற ரஜினி பேசும் வசனமும் வரவேற்பை பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
பிக் பாஸுக்கு இடையே வெளியான ஜெயம் ரவியின் “சைரன்” டீசர்!
தீபாவளி திருநாள்: தலைவர்கள் வாழ்த்து!