லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து சாதனைகளை படைத்து வருகிறது.
படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வரும் நிலையில் வசூலில் எந்தவித பாதிப்பும் இன்றி கூலி வெற்றி நடைபோட்டு வருகிறது.
உலகம் முழுவதும் படத்தின் முதல் நாள் வசூல் ரூ.151 என சன்பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது. மேலும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலும் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது.
இதனையடுத்து பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர் சாக்னில்க் தளத்தின் படி, கூலி இரண்டாம் நாள் வசூலாக படம் ரூ.118 கோடி வசூலித்துள்ளதாக கணித்துள்ளது.
இரண்டாம் நாளில் காலை மற்றும் பிற்பகல் காட்சிகள் 63.86% மற்றும் 86.25% ஆக பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் மாலை மற்றும் இரவு காட்சிகள் முறையே 86.37% மற்றும் 86.33% ஆக அதிக எண்ணிக்கையில் உள்ளன.
இந்தப் படம் அதிகபட்சமாக சென்னையிலும் (721 காட்சிகள்) பெங்களூருவிலும் (752 காட்சிகள்) அதிக எண்ணிக்கையில் திரையிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அளவில் இரு நகரங்களிலும் 80% ஐத் தாண்டியது. சென்னையில் மட்டும் இரண்டாம் நாளில் 96.50% என்ற உச்சக்கட்ட வசூலை எட்டியது.
இதன்மூலம் இரண்டு நாட்களில் கூலி உலகம் முழுவதும் ரூ.250 கோடி வசூலை தாண்டும் என தெரிவித்துள்ளது.
மேலும் இப்படம் ரஜினியின் முந்தைய படமான வேட்டையன் (ரூ.245 கோடி) மற்றும் அஜித்தின் குட் பேட் அக்லி (ரூ.212 கோடி) படங்களின் ஒட்டுமொத்த வாழ்நாள் வசூல் சாதனையை இரண்டு நாளில் முறியடிக்கும்.
ரஜினிகாந்தின் கடைசி பிளாக்பஸ்டர் படமான ஜெயிலர் இந்தியாவில் ரூ.100 கோடி வசூலைக் கடக்க மூன்று நாட்கள் ஆனது. அதேவேளையில் கூலி இரண்டு நாட்களில் அந்த மைல்கல்லை எட்டி புதிய சாதனையை படைத்துள்ளதாக சாக்னில்க் தளம் குறிப்பிட்டுள்ளது.
