கேரளாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான ஹேமா குழுவின் அறிக்கை குறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த் தனது கருத்தைப் பதிவு பண்ணினார்.
மலையாள திரைத்துறையில் பணிபுரியும் பெண் நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் சந்திக்கும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு முன்னாள் நீதிபதி ஹேமாவின் தலைமையிலான குழுவிற்குக் கேரள அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த அறிக்கை கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை வெளியான பிறகு பல மலையாள திரைத்துறையச் சார்ந்த முன்னணி ஆண் நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் கலைஞர்கள் மீது மலையாள நடிகைகள் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.
மேலும், இந்த அறிக்கை வெளியானதால் கேரள திரைத்துறை சங்கமான “அம்மா”(AMMA)-வின் தலைவர் மோகன் லாலும் , செயற்குழுவின் மொத்த உறுப்பினர்களும் ராஜினாமா செய்தனர்.
இந்த நிலையில்தான், இன்று ரஜினிகாந்த்திடம் ஹேமா குழுவின் அறிக்கை குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினி, ஹேமா குழு அறிக்கை பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்றார்.
மேலும், வேட்டையன் படம் அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாவதால் அன்றைய தினம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த கங்குவா திரைப்படம் வேறு தேதியில் ரிலீஸ் செய்யப்படும் என்று சூர்யா பேசியது குறித்து, அவரது அன்புக்கும் பாசத்திற்கும் நன்றி என்று ரஜினி தெரிவித்துள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஆளுநரை சந்தித்தது ஏன்? – ஹெச்.ராஜா விளக்கம்!
“டைரக்டர் ரஞ்சித் எனக்கு வாலிபரின் நிர்வாண போட்டோ அனுப்பினாரா?” – ரேவதி சொல்லும் விளக்கம்
