21 ஆண்டுகளுக்கு பிறகு… ஒரே ஸ்டூடியோவில் கமல் – ரஜினி!… வைரல் வீடியோ!

Published On:

| By christopher

rajini kamal met same shooting spot after 21 years

ஒரே ஸ்டூடியோவில் 21 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியும் கமலும் நேரில் சந்தித்துக்கொண்ட புகைப்படமும், வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 170 ஆவது படத்தில் நடித்து வருகிறார்.

அதேபோன்று ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த இருபெரும் நட்சத்திரங்களின் படங்களையும் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் தயாரித்து வருகிறது.

இந்த நிலையில், தலைவர்170 மற்றும் இந்தியன்2 பட ஷூட்டிங்கும் சென்னையில் ஒரே ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து ரஜினியும், கமலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோவை லைகா தனது சமூகவலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது.

வீடியோவில் “எத்தன நாளாச்சுல… இரண்டு பேரும் ஒரே ஸ்டுடியோவில் சந்திச்சு?” என்று ரஜினி ஆச்சரியத்துடன் கேட்க, ’ஆமால்ல’ வியந்தபடி பதிலளிக்கிறார் கமல்.

ஒரு சில நிமிடங்கள் நடைபெற்ற சந்திப்பில் இருவரும் ஆரத்தழுவி ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டது ரசிகர்களை ஆச்சரியமடைய வைத்துள்ளது.

முன்னதாக கடந்த 2002ஆம் ஆண்டு பாபா மற்றும் பஞ்ச தந்திரம் படப்பிடிப்பும் ஒரே ஸ்டூடியோவில் நடந்தபோது இருவரும் சந்தித்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே ஸ்டூடியோவில் இருவரும் மகிழ்ச்சியுடன் சந்தித்து கொண்டது சமூகவலைதளங்களில் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ரன்பீர் சிங்கின் அசர வைக்கும் ‘அனிமல்’ ட்ரெய்லர்!

Exclusive: அமீர் விஷயத்துல ஞானவேல் ராஜா சொல்றது எல்லாமே பொய்… தயாரிப்பாளர் கணேஷ் ரகு பேட்டி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share