சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான ரசிகர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா, பிரியங்கா மோகன், மோகன்லால் , சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திலிருந்து காவாலா, ஹுக்கும் ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக உள்ள சூழலில் ஜூலை 26 ஆம் தேதி இப்படத்தின் மூன்றாவது பாடலான ‘ஜுஜுபி’ லிரிக்கல் வீடியோ வெளியானது.
இந்நிலையில், இன்று (ஜூலை 28) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ’ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான ரஜினி ரசிகர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
https://twitter.com/CinemaWithAB/status/1684938347578593280?s=20
முன்னதாக இந்த இசை வெளியீட்டு விழாவுக்கான 1000 இலவச டிக்கெட்டுகளுக்கான லிங்க் வெளியிடப்பட்ட 15 வினாடிகளில் அனைத்து டிக்கெட்களும் காலியானதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பயிர்களை அழித்த என்.எல்.சி: அன்புமணி போராட்டமும் வன்முறையாக மாறிய பின்னணியும்!
“தமிழகத்தின் பெருமையை உலக அரங்கிற்கு மோடி கொண்டு சென்றுள்ளார்” – அண்ணாமலை
