லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியானது. இப்படத்தில் நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கூலி திரைப்படம் வசூலில் முதல் நாள் வசூலில் பல சாதனைகளை படைத்துள்ளது.
படத்தை தயாரித்த சன்பிக்சர் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின் படி, கூலி உலகளவில் முதல் நாளில் ரூ.151 கோடி வரை வசூல் செய்துள்ளது.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ உலகளவில் முதல் நாளில் ரூ. 148 கோடி வசூல் செய்திருந்ததே சாதனையாக இருந்தது. அந்த தற்போது அந்த சாதனையை கூலி திரைப்படம் முறியடித்துள்ளது.

இதுதவிர ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலும் முதல் நாள் வசூலில் விஜய்யின் முந்தைய திரைப்படங்களான லியோ மற்றும் கோட் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.









