சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இன்று (டிசம்பர் 12) ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 75 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். பஸ் கண்டக்டராக வாழ்க்கையைத் தொடங்கிய ரஜினிகாந்த் பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.
தற்போது வரை 170 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் 50 ஆண்டு காலமாக ஹீரோவாக வலம் வருகிறார். தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் இன்று தனது 75 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.
இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநர் நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினருடன் இணைந்து ரஜினிகாந்த் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார்.
தற்போது இது தொடர்பான வீடியோ வெளியாகி ரஜினி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது
அவரது பிறந்த நாளையொட்டி கடந்த 1999ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர்ஹிட்டான படையப்பா படம் 25 ஆண்டுகள் கழித்து மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
