மருத்துவமனையில் ரஜினி : நலம்பெற ஸ்டாலின் வாழ்த்து!

Published On:

| By christopher

 

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை நலம்பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்டோபர் 1) வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட ரஜினிக்கு  அடிவயிறு பகுதியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

தொடர்ந்து நேற்று மதியம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இன்று காலை 6 மணி முதல் அவருக்கு கிட்னி மற்றும் இதயம் தொடர்பான மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

இந்த நிலையில் ரஜினிகாந்த் விரைந்து உடல்நலம் பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர், “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன்” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதே போன்று பிரபல அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் ரஜினிகாந்த் உடல் நலம் பெற சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

ரஜினி எப்படி உள்ளார்? : லதா ரஜினிகாந்த் விளக்கம்!

அப்பலோவில் ரஜினி… கிட்னியில் பிரச்சனையா?

ஹெல்த் டிப்ஸ்: செரிமானம் காக்க 10 கட்டளைகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share