மாலத்தீவில் ரஜினி

Published On:

| By Jegadeesh

 

நடிகர் ரஜினிகாந்த் மாலத்தீவுக்கு செல்லும் வழியில் இலங்கையில் அமைந்துள்ள விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். இந்தப் படத்தில் இவருடன் இணைந்து ரம்யாகிருஷ்ணன், தமன்னா, மோகன்லால் , சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஃ ஷெரப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும், ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் ஜூலை 17 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இதனிடையே ரஜினிகாந்த் அவருடைய மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி வரும் ’லால் சலாம்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மாலத்தீவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  மாலத்தீவுக்கு செல்லும் வழியில் இலங்கையில் அமைந்துள்ள விமான நிலையத்தில்  ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சார்பில் ரஜினிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இது தொடர்பாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், தமிழ் நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து மாலத்தீவிற்கான பயணத்தை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்-ல் மேற்கொண்டார் என்று கூறியுள்ளது. மேலும், ரஜினியின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு – லஞ்ச ஒழிப்புத்துறை பதில்!

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: ஒரே நாளில் இரண்டு தங்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share