டப்பிங் துவங்கிய ரஜினி.. சிவாவின் கொல்கத்தா திட்டம் !

Published On:

| By Balaji

நடிகர் ரஜினிகாந்தின் 168வது படமாக உருவாகிவருகிறது ‘அண்ணாத்த’. இந்தப் படத்தை வீரம், விவேகம், வேதாளம் மற்றும் விஸ்வாசம் என அஜித்துக்கு நான்கு ஹிட் கொடுத்த சிவா இயக்கிவருகிறார். டி.இமான் இசையமைக்க சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது.

இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்பொழுது நடந்து வருகிறது. இந்தப் படத்தின் லேட்டஸ்ட் ஷெட்யூல் கொல்கத்தாவில் நடக்க வேண்டியது. ஆனால், கொரோனா அச்சுறுத்தலால் கொல்கத்தா வர மறுத்துவிட்டார் ரஜினி. கடந்த ஒரு வாரமாக சென்னையிலேயே படப்பிடிப்பை முடித்துவிட்டார்கள்.

ADVERTISEMENT

அண்ணாத்த படத்துக்கான 90% படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அதோடு, ரஜினிக்கான முழு படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாம். இந்நிலையில், தன்னுடைய காட்சிகளுக்கான டப்பிங்கை துவங்கிவிட்டார் ரஜினி.

கொல்கத்தா செல்லாமல் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாகாது. படத்துக்கு ஃபைனல் டச் கொடுப்பதற்காக கொல்கத்தா சென்றாக வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறார். ரியாலிட்டிக்காக கொல்கத்தாவில் சில மாண்டேஜ் ஷாட்டுகள் எடுக்க வேண்டியிருக்காம். தற்பொழுது, ரஜினிக்கான டப்பிங் பணிகளை முடித்துவிட்டு, கொல்கத்தா செல்கிறது டீம். அதோடு, படப்பிடிப்பும் முடியும் என்கிறார்கள்.

ADVERTISEMENT

ஆக்‌ஷன், சென்டிமெண்ட் & காமெடி கலந்த ரூரல் எண்டர்டெயின்மெண்டாக படம் உருவாகிவருகிறதாம். ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம், தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக வருகிற நவம்பர் 04ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

விஜய்யின் மாஸ்டர் படத்துக்குப் பிறகே திரையரங்குகள் உயிர்த்தெழுந்தது. அதுபோல, திரையரங்கில் மீண்டும் மக்களை ஈர்க்க திரையரங்க உரிமையாளர்களின் பெரும் நம்பிக்கையாக ‘அண்ணாத்த’ இருக்கிறது. பார்க்கலாம்!

ADVERTISEMENT

**-தீரன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share