”தொலைத்துவிடுவேன்” : மாஃபா. பாண்டியராஜனுக்கு ராஜேந்திர பாலாஜி பகிரங்க மிரட்டல்!

Published On:

| By christopher

Rajendra Balaji threatens Pandiyarajan!

அதிமுக பொதுக்கூட்டத்தில் கட்சி நிர்வாகியை கன்னத்தில் அறைந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி இன்று (மார்ச் 7) கட்சியினர் மத்தியில் விளக்கம் அளித்துள்ளார். endra Balaji threatens Pandiyarajan!

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் கடந்த 5ஆம் தேதி இரவு நடைபெற்றது. இதில் விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி சிறப்புரையாற்றினார். அமைப்புச் செயலாளர் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது கட்சி நிர்வாகிகள் பலரும் மேடையில் அமர்ந்திருந்த ராஜேந்திர பாலாஜி, பாண்டியராஜன் ஆகியோருக்கு பொன்னாடை அணிவிக்க வந்தனர்.

விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த, கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் நந்தகுமார் (52) பொன்னாடை அணிவிக்க வந்தார். ராஜேந்திர பாலாஜிக்கு பொன்னாடை அணிவித்துவிட்டு, அருகே அமர்ந்திருந்த பாண்டியராஜனுக்கு பொன்னாடை அணிவிக்கச் சென்றார்.

அப்போது, திடீரென தனது இருக்கையிலிருந்து எழுந்த ராஜேந்திர பாலாஜி, நந்தகுமார் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் உடனடியாக நந்தகுமாரை மேடையிலிருந்து இறக்கி, அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சிவகாசியில் இன்று நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், கன்னத்தில் அறைந்த சம்பவம் தொடர்பாக ராஜேந்திர பாலாஜி ஆவேசமாக விளக்கம் அளித்தார்.

உனக்கு என்ன வரலாறு இருக்கு? Rajendra Balaji threatens Pandiyarajan!

அவர், ”மாவட்டச் செயலாளரான நான் இருக்கும் போது மாஃபா பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்தால் விட்டுவிடுவேனா? பல கட்சிக்கு சென்றுவிட்டு வந்த பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்ததால் நிர்வாகி கன்னத்தில் அறைந்தேன்.

அதிமுக ரத்தம் எனக்குள் ஓடுகிறது. ஆனால் உனது உடம்பில் காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், பாஜக, அதிமுக, தேமுதிக, ஓபிஎஸ், அதிமுக… வெக்கமா இல்லையா உனக்கு?

கட்சியை காட்டிக்கொடுத்தவர் மாஃபா பாண்டியராஜன். எனக்கு வரலாறு உள்ளது. உனக்கு என்ன வரலாறு இருக்கு? நீ செய்வதெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்க நான் கிறுக்கனோ, பைத்தியக்காரனோ அல்ல. தொலைத்துவிடுவேன்.

எடப்பாடிக்கு குழி பறிக்கும் வேலை! Rajendra Balaji threatens Pandiyarajan!

அதிமுகவில் நான் ஒரு குறுநில மன்னர்தான். எனக்கு பின்னால் உள்ள அதிமுக தொண்டர்கள் வாள் ஏந்திய படை வீரர்கள். எங்களை அழிக்க நினைப்பவர்களை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நாங்கள் ஒன்றும் பேடிகள் அல்ல. திமுகவை தான் எதிர்க்கிறோம்.. நீ ஏன் குறுக்கே வருகிறாய்?

என்னை பற்றி பேச வேண்டும் என்றால் விருதுநகரில் வைத்து பேச வேண்டும்.. சென்னையில் சென்று ஏன் பேசுகிறார் மாஃபா பாண்டியராஜன்?

வெற்றி வந்தாலும் தோல்வி வந்தாலும் அதிமுக இயக்கத்தில்தான் இருப்பேன். அதிமுகவின் மூன்றாவது அத்தியாயம் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவிற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து எடப்பாடிக்கு குழி பறிக்கும் வேலை நடைபெற்று வருகிறது.

விருதுநகர் மாவட்ட அதிமுகவில் என்னை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது. விருதுநகரில் அதிமுகவினர் மீது போலீஸ் பொய்வழக்கு போடமுடியுமா? அதிமுகவை வாழவைக்க எந்த நிலைக்கும் நான் செல்வேன். எடப்பாடிக்கு எதிராக யார் வந்தாலும் அரிவாள், துப்பாக்கி ஏந்தி நிற்பேன். உன்னால் முடியுமா? என்று ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share