அமைச்சர் ரகுபதிக்கு ஆளுநர் பதில்!

Published On:

| By christopher

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் தொடர்பாக கேள்வி எழுப்பிய அமைச்சர் ரகுபதிக்கு ஆளுநர் மாளிகை சார்பில் இன்று (ஜூலை 6) விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநர் மாளிகைக்கு நேற்று கடிதம் அனுப்பியிருந்தார். அதில், அதிமுக முன்னாள் அமைச்சர்களான கே.சி.வீரமணி, சி.விஜய பாஸ்கர்,  பி.வி.ரமணா மற்றும் எம்.ஆர்.விஜய பாஸ்கர் ஆகியோர் மீதான வழக்குகளை சிபிஐ விசாரிக்க ஆளுநர் ஏன் அனுமதி வழங்கவில்லை என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை சார்பில் இன்று விளக்கக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ”பி.வி.ரமணா மற்றும் சி.விஜய பாஸ்கர் ஆகியோர் மீதான வழக்குகள் சிபிஐயால் விசாரிக்கப்பட்டு அவை சட்டப்பூர்வ விசாரணையில் உள்ளன.

ADVERTISEMENT

கே.சி.வீரமணி மீதான விஜிலென்ஸ் இயக்குனரகம் வழக்கில், மேல் நடவடிக்கைக்காக புலனாய்வு அறிக்கையின் முறையான அங்கீகரிக்கப்பட்ட நகலை மாநில அரசு சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. அதனால் அதில் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

எம்.ஆர்.விஜய பாஸ்கர் தொடர்பாக ராஜ்பவனுக்கு மாநில அரசிடம் இருந்து எந்த குறிப்பும் அல்லது கோரிக்கையும் இதுவரை வரவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கிறிஸ்டோபர் ஜெமா

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக முத்துசாமி நியமனம்!

செந்தில் பாலாஜியின் 2 வருடங்கள்: ஷாக் அடிக்கும் மின் வாரிய ஊழல்!

Photo of author
christopher
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share