கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார். சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி.எம். சுந்தர், ஷில்பா மஞ்சுநாத், ஆனந்த்ராஜ், கருணாகரன், ரமேஷ் திலக், பி.எல்.தேனப்பன் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தில் நடிகர் கார்த்தி எம்ஜிஆர் ரசிகராக நடிக்கிறார்
சினிமா அரசியல் என்று பயணிக்கும் கதை இது
எந்தெந்த படத்திலோ எம்ஜிஆர் பாட்டு வருகிறபோது, கதாநாயகனே எம்ஜிஆர் ரசிகனாக நடிக்கும் நிலையில் எம்ஜிஆர் பாட்டு இல்லை என்றால் சினிமாக் குத்தம் ஆகி விடுமே.
அன்பே வா படத்தில் இடம் பெற்ற ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடல் இருக்கிறதே.. தமிழ் சினிமாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட பாடல் அதுதான். எல்லா பெரிய ஹீரோக்களும் ஏதோ ஒரு படத்தில் அந்தப் பாடலின் சில வரிகளுக்கு நடித்தோ அல்லது பாடியோ அல்லது ஏதாவது ஒரு வசனத்தில் குறிப்பிட்டோ , ஹம்மிங் செய்தோ இருப்பார்கள் எம் ஜி ஆரே ஒரு படத்தில் ஹம்மிங் செய்த பாட்டு அது .
வா வாத்தியார் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் சிவன் . இவர் ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடலை தனது அம்மாவுடன் சேர்ந்து ரீமிக்ஸ் செய்து பாடி வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோவில் நடிகர் கார்த்தி சந்தோஷ் நாரயாணனின் அம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். படத்தின் நாயகி கீர்த்தி ஷெட்டியும் “வாவ் சூப்பர்” என பதிவிட்டுள்ளார். நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ், இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத், பாடகர் விஜய் ஏசுதாஸ் உட்பட பலரும் வீடியோ பார்த்து வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.
இப்பாடலின் ரீமிக்ஸ் வடிவம் படத்தில் இடம் பெறுகிறதா ? “என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ் என்கிறார்கள் . எப்போ வந்தாலும் அந்தப் பாட்டுக்கு ஒரு மவுசு உண்டு.
டிசம்பர் 12 ஆம் தேதி வெளியாகிறது என்று சொல்லப்பட்ட நிலையில் இந்தப் படவெளியீட்டுக்கும் தடை இருப்பதால் படம் எப்போ வெளியாகும் என்பதும் சஸ்பென்ஸாக இருப்பதுதான்….
–– ராஜ திருமகன்
