ADVERTISEMENT

சஹால் சுழலில் சிக்கிய ஐதராபாத்! அபார வெற்றி பெற்ற ராஜஸ்தான்!

Published On:

| By christopher

ஐதராபாத் அணிக்கு எதிரான இன்றைய (ஏப்ரல் 02) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளின் 4வது லீக் ஆட்டம் ஐதாராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெற்றது.

ADVERTISEMENT

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்களை எடுத்தது.

அதிகபட்சமாக அந்த அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன் 55 ரன்களும், ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் தலா 54 ரன்களும் அடித்தனர்.

ADVERTISEMENT

இதையடுத்து 120 பந்துகளில் 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது சன்ரைசர்ஸ்.

பவுல்ட் வீசிய முதல் ஓவரிலேயே அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினர். மேலும் முதல் 10 ஓவரிலேயே ஐதராபாத் அணி 6 விக்கெட்டுகளை இழந்தது.

ADVERTISEMENT

அதன் பிறகு இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய அப்துல் சமத்(32) கடைசி ஓவர்களில் அதிரடி காட்டினார்.

எனினும் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து 72 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வியைச் சந்தித்தது.

ராஜஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக சஹால் 17 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

கிறிஸ்டோபர் ஜெமா

மதுரை: பிரஸ்மீட்டை பன்னீர் தவிர்த்தது ஏன்?

சென்னை டூ சேலம்: எடப்பாடியின் விஸ்வரூபம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share