ராஜஸ்தான் தேர்தல்: வாக்குப்பதிவு சதவிகிதம் எவ்வளவு?

Published On:

| By Selvam

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று (நவம்பர் 25) மதியம் 1 மணி நிலவரப்படி 40.27 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 199 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெறுகிறது.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், ஆளுநர் கல்ராஷ் மிஷ்ரா, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே உள்ளிட்டோர் தங்களது வாக்குகளை செலுத்தினர்.

மதியம் 1 மணி நிலவரப்படி ராஜஸ்தானில் 40.27 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கிஷான்காஞ்ச் தொகுதியில் 49.60 சதவிகிதமும், அஜ்மர் தெற்கு தொகுதியில் 33.42 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை பொறுத்தவரை ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்தசூழலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “காங்கிரஸ் அரசு இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ராஜஸ்தானில் ஆட்சியமைக்கும். தேர்தலுக்கு பின்னர் பாஜக காணாமல் போகும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மணல் குவாரி தொழிலதிபர் வீடுகளில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை!

பியூட்டி டிப்ஸ்: சருமத்தில் தோன்றும் பால் மருக்கள்… நீக்குவது எப்படி?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share