நாக் அஷ்வின் இயக்கத்தில் கல்கி 2898 ஏடி திரைப்படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் நடிகர் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். வரும் ஜூன் 27-ஆம் தேதி கல்கி 2898 ஏடி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதனை தொடர்ந்து சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ஸ்பிரிட், பிரஷாந்த் நீல் இயக்கத்தில் சலார் 2 திரைப்படங்களில் பிரபாஸ் நடிக்க உள்ளார்.
நடிகை அனுஷ்காவுடன் பிரபாஸுக்கு திருமணம் நடக்கப்போவதாக சமூக வலைதளங்களில் அவ்வப்போவது செய்திகள் வைரலாகும்.
இந்தநிலையில், பிரபாஸுக்கு இன்னும் ஏன் திருமணமாகவில்லை என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் ராஜமெளலி கூறும்போது, “திருமணம் செய்து கொள்வதில் பிரபாஸ் மிகவும் சோம்பேறியாக இருக்கிறார்” என்று தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து ஃபிலிம் கம்பேனியன் யூடியூப் சேனலுக்கு பிரபாஸ் அளித்த பேட்டியில், “நான் மிகவும் சோம்பேறி. மக்களை சந்திக்க வெட்கப்படுவேன். எப்போதும் மக்களுடன் என்னால் இருக்க முடியாது. இன்னும் ஏன் நாம் இந்த துறையில் இருக்கிறோம் என்று கூட அடிக்கடி ஆச்சரியப்படுவேன்.
படப்பிடிப்பின் போது பலரை செட்டில் வைத்து பார்க்கையில் சற்று கவலையாக இருக்கும், சக நடிகர்கள் அதிகளவில் டேக் எடுத்தால் டென்ஷனாகிவிடுவேன்” என்று பிரபாஸ் தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘நெகடிவ்’ கேரக்டரில் விஜய் அசத்திய ‘பிரியமுடன்’!
சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் வழக்கு : அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!