”ஆலங்கட்டி மழ தாலாட்ட வந்தாச்சு…” வேலூர் மக்களை குளிர்வித்த மழை!

Published On:

| By Kavi

கோடை மழை மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்து மக்களை குளிர்வித்துள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் 100 டிகிரி ஃபார்ன்ஹீட்டை கடந்து வெப்பம் பதிவாகி வருகிறது. நேற்று மட்டும் 20 மாவட்டங்களில் வெயில் சதமடித்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

வேலூரில் கடந்த சில தினங்களாகவே 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது.

இந்நிலையில் இன்று (மே 2) மாலை வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் வெப்பம் சற்று தணிந்துள்ளது.

குடியாத்தம், மேல் ஆலத்தூர், மேல் பட்டி, பேரணாம்பட்டு, செம்பேடு, சின்ன சேரி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. வளத்தூர் பகுதியில் வீட்டின் ஓடுகள் உடையும் அளவுக்கு ஆலங்கட்டி கொட்டியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் மாதனுர் பகுதியில் திடீரென சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.

ஆலங்கட்டி மழை பெய்ததால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி அடைந்தனர்.

குடியாத்தம் பகுதியில் ஆலங்கட்டிகளை குவித்து அதை அள்ளி வீசி சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர்.

இதேபோல ராசிபுரத்திலும், ஏற்காட்டிலும் மழை பெய்து குளிர்ந்த நிலை ஏற்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்ல இ பாஸ் : ஹோட்டல் உரிமையாளர்கள், உள்ளூர் மக்கள் சொல்வது என்ன?

பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு பறந்தது எப்படி? வெளியுறவுத்துறை புது விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share