தமிழகத்தில் மழை : மக்களை குளிர்வித்த வானிலை மையம்!

Published On:

| By christopher

Rain in Tamil Nadu Meteorological Center

கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இரு நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து இன்று (பிப்ரவரி 12) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “அதில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது. மழை எங்கும் பதிவாகவில்லை.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 36.6 டிகிரி டிகிரி செல்சியஸ் (97.88 F) வெப்பம் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக நாமக்கல்லில் 14.0 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

வறண்ட வானிலையே நிலவும்!

ADVERTISEMENT

கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

உள்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

நாளை மறுநாள் வரும் 14ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

Tennis : முதன்முறையாக டாப்-100ல் நுழைந்து இந்திய வீரர் சாதனை!

கடுப்பான பிசிசிஐ… கண்டிப்பா நீங்க இத செய்யணும்… வீரர்களுக்கு பறந்த உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share