சென்னையில் இன்று மாலை முதல் ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில் 10 மணி வரை இடி மின்னலுடன் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. rain in chennai upto 10 pm
தென்மேற்கு பருவமழையை தொடர்ந்து வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. மேலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதன் காரணமாக கோவை, நீலகிரி மாவட்டத்தில் இரண்டு தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்தநிலையில் சென்னையிலும் இன்று மாலை முதல் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
வேளச்சேரி, கிண்டி, சேப்பாக்கம் , அண்ணா நகர், திருமங்கலம், முகப்பேர், கோயம்பேடு, வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கம் என பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.
இந்தநிலையில், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. rain in chennai upto 10 pm