சென்னையில் இடி மின்னலுடன் மழை பெய்ததால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. rain in Chennai
தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் சென்னையில் அவ்வபோது மழை பெய்து வருகிறது. இன்று காலையில் இருந்து சென்னையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலை 4.45 மணிக்கு பிறகு பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.
தி நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், சேத்துப்பட்டு, எழும்பூர், வடபழனி, தேனாம்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, அண்ணா சாலை, சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
மழை காரணமாக பணி முடிந்து வீடு திரும்புபவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
தாம்பரம், மீனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்ததால் மோசமான வானிலை காரணமாக விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானிலேயே வட்டமடித்தன,
சென்னையில் தரையிறங்க வந்த 8 இண்டிகோ விமானங்கள் உட்பட 10 விமானங்கள் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 12 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் செல்கின்றன.
அதே சமயம் குளிர்ச்சியான வானிலை நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். rain in Chennai