5
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் , தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதுபோன்று சென்னையில் மாலைப்பொழுதில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் முதல் குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகக் கூடும் என்றும் கூறியுள்ளது.
மேலும் கேரள கடற்கரை, கர்நாடக கடற்கரை லட்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் 15ஆம் தேதி வரை 45 கிலோ மீட்டரிலிருந்து 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால் இந்த பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
**-கவிபிரியா**
