தமிழகத்தில் நேற்று முதல் ஆங்காங்கே மழை பெய்து வருவதால் கோடை வெப்பம் தணிந்துள்ளது. rain for 17 districts in tamilnadu
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்த நிலையில் தென்காசி, மதுரை, சிவகங்கை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் என பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. இதனால் வெப்பம் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதிகபட்சமாக, தென்காசி மாவட்டம் சிவகிரியில் மழை கொட்டித் தீர்த்தது. அங்கு 110 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மதுரை விமான நிலையத்தில் 63.5, சிவகங்கையில் 56, சென்னை மடிப்பாக்கத்தில் 38மிமீ மழை பதிவாகியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, பெருங்குடி, பெரும்பாக்கம், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், கிண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.
இந்தநிலையில், “விருதுநகர், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஏப்ரல் 3) கூறியுள்ளது.
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இன்று முதல் வரும் 5-ம் தேதி வரை 2 – 3° செல்சியஸ் குறையக்கூடும். வட உள் தமிழகத்தின் ஒருசில இடங்களில் 2° செல்சியஸ் வரை உயரக்கூடும். தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை வரும் 6, 7-ம் தேதிகளில் 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளது. rain for 17 districts in tamilnadu