சென்னையில் மழை பாதிப்பு: புகார் எண்கள்!

Published On:

| By admin

சென்னையில் மழை காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகள் தொடர்பாக புகார் அளிக்கும் எண்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது.
சென்னையில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், மழையினால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுகிறது. மழைநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இந்த நிலையில், மழை காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகள் தொடர்பாக புகார் அளிக்கும் எண்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி 1070 மற்றும் 1077 ஆகிய கட்டணமில்லா எண்களை தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும், 94458 69848 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், TNSMART செயலி மூலமாகவும் புகார் அளிக்கலாம் எனவும் பேரிடர் மேலாண்மை துறை அறிவித்துள்ளது.

**ராஜ்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share