கனமழை எச்சரிக்கை: சென்னை புத்தக காட்சி விடுமுறை!

Published On:

| By Selvam

Rain Chennai book fair holiday

கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று (ஜனவரி 8) சென்னை புத்தக காட்சிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று அநேக இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தநிலையில், கன மழை எச்சரிக்கை காரணமாக கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை உள்ளிட்ட 9 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு முதல் சென்னையில்  மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே வெள்ள நீர் தேங்கியுள்ளது. சென்னையில் இன்று கனமழை பெய்யும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்தநிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை புத்தக காட்சிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான பபாசி முகநூல் பக்கத்தில், “சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் வந்து செல்வதில் ஏற்படும் சிரமங்களுக்காக இன்று (ஜனவரி 8) ஒரு நாள் மட்டும் புத்தகக் காட்சிக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. நாளை வழக்கம் போல புத்தகக் காட்சி செயல்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சிவகாசி காலண்டர்கள் விற்பனை ரூ.350 கோடி: மக்களவைத் தேர்தலால் 10% உயர்வு!

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் இரண்டாம் நாள் அமர்வு: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share