தமிழகத்தில் இன்று (அக்டோபர் 14) முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று அதிகாலை 5:30 மணி அளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து புதுச்சேரி வட தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி அடுத்த இரண்டு நாட்களில் நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக வரும் 17ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம், சென்னை போன்ற தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பலரும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குத் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.மேலும் மெட்ரோ மற்றும் மின்சார ரயில்களின் எண்ணிக்கைகளை அதிகரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கவரைப்பேட்டை ரயில் விபத்து : மேலும் 10 பேருக்கு சம்மன்!
சென்னைக்கு கனமழை: 15 மண்டலங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!