எடப்பாடி உறவினர் வீட்டில் ரெய்டு: பின்னணி என்ன?

Published On:

| By Kavi

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் வீட்டில் இன்று (ஜனவரி 7) வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் செட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த என்.ராமலிங்கம், என்.ஆர்.கன்ஸ்ட்ரக்சன் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

இவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறவினர் என தகவல்கள் வருகின்றன. இவருக்கு சொந்தமான இடங்களில் இன்று (ஜனவரி 7) வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, கோவை, ஈரோடு என தமிழகத்தில் 26 இடங்களிலும் பெங்களூருவிலும் என்.ஆர். கன்ஸ்ட்ரக்சன் தொடர்புடைய இடங்களிலும்இந்த சோதனையானது தொடர்ந்து வருகிறது.

முன்னதாக, கர்நாடகாவில், நீர் பாசனம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் 2016ல் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

அத்துறைகள் தொடர்பான பல்வேறு கட்டுமானப் பணிகளில், ராமலிங்கத்துக்கு சொந்தமான, நிறுவனம் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அப்போது ராமலிங்கத்துக்கும் சொந்தமான இடங்களிலும் சோதனை நடந்தது.

கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாமல் 152 கோடி ரூபாய் சொத்துகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனடிப்படையில் தற்போது ராமலிங்கத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுவதாக ஐடி வட்டாரங்கள் கூறுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா

நடிகர் பிரபுவை தாக்கிய நோய்… மூளை அனீரிசிம் வர என்ன காரணம்?

தமிழ்நாட்டில் ஹெச்எம்பிவி வைரஸ் எங்கெங்கே? சுகாதாரத் துறை சொல்வதை கவனிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share