ADVERTISEMENT

ராகுல் ராஜினாமா… வயநாட்டில் பிரியங்கா போட்டி!

Published On:

| By Kavi

ரேபரேலி தொகுதியை ராகுல் காந்தி தக்க வைத்துக்கொள்கிறார் என்றும் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

டெல்லியில் இன்று(ஜூன் 17) மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

ADVERTISEMENT

மக்களவைத் தேர்தலில் வயநாடு, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி எந்த தொகுதியை தக்க வைத்துகொள்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில்,  “ரேபரேலியை ராகுல் தக்க வைத்துக் கொள்கிறார். வயநாடு தொகுதியை ராஜினாமா செய்கிறார்.

வயநாடு தொகுதியில் இருந்து பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்” என்று கார்கே கூறினார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அவரை தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி,  “வயநாடு தொகுதியுடன் எனக்கு உணர்வுப்பூர்வமான தொடர்பு இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக வயநாடு எம்.பி.யாக இருந்தேன். மக்களின் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி. பிரியங்கா காந்தி வதேரா வயநாட்டில் இருந்து தேர்தலில் போட்டியிடுவார். ஆனால் நானும் அவ்வப்போது வயநாட்டிற்கு வருவேன். இது கடினமான முடிவு” என கூறினார்.

“வயநாட்டில் போட்டியிடுவதில் எனக்கு மகிழ்ச்சி. மக்கள் ராகுல் அங்கு இல்லாததை உணர நான் விடமாட்டேன். நல்ல மக்கள் பிரதிநிதியாக இருக்க அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன்” என்று பிரியங்கா தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

சசிகலாவுக்கு நோ ரீ எண்ட்ரி : ஜெயக்குமார் பேட்டி!

தெலுங்கு தேசம் வேட்பாளர் வெற்றி… திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற கிராம மக்கள்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share