பணமோசடி தடுப்பு முகமையான அமலாக்கத் துறைக்கு முழு நேர இயக்குநராக ராகுல் நவினை மத்திய அரசு நியமித்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு அமலாக்கத் துறை இயக்குநராக எஸ். கே. மிஸ்ரா நியமிக்கப்பட்டார்.
இரண்டு ஆண்டுகள் இவருடைய பணி காலம் முடிந்த பின்னும் 2021, 2022, 2023 என மூன்று முறை எஸ்.கே. மிஸ்ராவை பணி நீட்டிப்பு செய்தது மத்திய அரசு.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்குத் தொடர்ந்தது. பின்னர் உச்சநீதிமன்ற உத்தரவால் அவர் கடந்த ஆண்டு செப்டம்பரில் பதவி விலகினார்.
தொடர்ந்து, பொறுப்பு இயக்குநராக ராகுல் நவீன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார்.
இந்தநிலையில் அமலாக்கத்துறையின் புதிய முழுநேர இயக்குநராக இன்று (ஆகஸ்ட் 14) ராகுல் நவீனை மத்திய அரசு நியமித்துள்ளது. இவர் அடுத்த 2 ஆண்டுகளுக்கு ED இயக்குநர் பதவியில் இருப்பார்.
அமைச்சரவையின் நியமனக் குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பீகாரைச் சேர்ந்த ராகுல் நவீன் 1993 பேட்ச் ஐஆர்எஸ் அதிகாரி ஆவார். மத்திய நிதித் துறையில் பணியில் சேர்ந்த இவர், இந்திய வருவாய், வருமான வரி உள்ளிட்ட துறைகளில் பணியாற்றியுள்ளார்.
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பலர் மீது அமலாக்கத் துறை வழக்குகள் உள்ள நிலையில் ராகுல் நவீன் முழு நேர இயக்குநராக நியமிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
GOAT Trailer : இன்றும் கைவிரித்த அர்ச்சனா… விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்!
வயநாடு நிலச்சரிவு : உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்தார் பினராயி விஜயன்