‘மோடி’ வழக்கு : ராகுல் காந்தியின் தண்டனை நிறுத்தி வைப்பு!

Published On:

| By Kavi

Rahul Gandhi's sentence suspended

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று நிறுத்தி வைத்துள்ளது.

மோடி சமுதாயம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து ராகுல் காந்தி குஜராத் உயர் நீதிமன்றத்துக்கு சென்றார்.

ஆனால் ராகுல் காந்தியின் சிறை தண்டனையை  நிறுத்தி வைக்க குஜராத் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதை எதிர்த்து ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை இன்று (ஆகஸ்ட் 4) விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நரசிம்மா, சங்சய் குமார் அமர்வு,  ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்தது.

உச்சபட்ச தண்டனைக்கான எந்த காரணங்களும் இல்லாததால் தண்டனையை நிறுத்திவைப்பதாக  நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் ராகுல் காந்தி எம்.பி.யாக தொடர்வார். நாடாளுமன்ற அலுவல்களில் அவரால் இனி பங்கேற்க முடியும்.

பிரியா

‘மோடி’ வழக்கு : ராகுல் காந்தியின் தண்டனை நிறுத்தி வைப்பு!

கரூரில் தொடரும் ED சோதனை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share