மருமகன் இருக்க பயம் ஏன்? முதன்முறையாக அறிமுகமான பிரியங்கா மகன்!

Published On:

| By Kumaresan M

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் மறைவுக்கு பிறகு, அவரின்  குடும்பத்தில் இருந்து  சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். இப்போது, முதன்முறையாக , ராகுலின்  சகோதரி பிரியங்கா காந்தியும் வயநாடு தொகுதியில் இடை தேர்தலில்  தேர்தலில் போட்டியிடுகிறார். இது,  ராகுல்காந்தி நின்று வெற்றி பெற்ற தொகுதிதான்.

இந்த நிலையில், ராகுல்  காந்தி தனது சகோதரி பிரியங்கா காந்தியின் மகன் ரைஹானை வெளியுலகிற்கும், அரசியலுக்கும் அறிமுகம் செய்துள்ளார்.

தனது சோசியல் மீடியா பக்கத்தில் ராகுல் காந்தி இரட்டை விரல்களை தூக்கிக்காட்டி ரைஹானுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதையடுத்து, ராகுல் காந்தி தனது மருமகனை அரசியலுக்கு அறிமுகம் செய்திருப்பதாக ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும்  கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.

ரைஹான் அரசியலுக்குள் நுழைந்தால்,  நேரு குடும்பத்தில் 5வது தலைமுறை அரசியல்வாதியாவார். தற்போது, 24 வயதான இவர், பிரியங்கா காந்திக்கு ஆதரவாக தேர்தல் பிரசார வேலைகளில் ஈடுபட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கு முன்பு ரைஹான் வெளியுலகில் அவ்வளவாக  தென்பட்டது கிடையாது. 24 வயதாகும் ரைஹான் புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

வனவிலங்குகள் பற்றி  அதிக அளவில் புகைப்படம் எடுத்து  கண்காட்சிகள் நடத்தியுள்ளார். ராகுல் காந்தி அரசு இல்லத்தை காலி செய்துவிட்டு தற்போது தனது தாயார் வசிக்கும்  10 ஜன்பத் இல்லத்தில் வசிக்கிறார். தீபாவளிக்காக வீட்டிற்கு பெயின்ட் அடித்துள்ளனர்.

அப்போது, ராகுல் காந்தி பெயின்ட்  அடிப்பவர்களுடன் கலந்துரையாடுவது போலவும், மருமகனுடன் சேர்ந்து பெயின்ட் அடிப்பது போலவும் வீடியோ ஒன்றை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார் .

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

அம்பேத்கர் நினைவு தினத்தில் திருமாவளவன் – விஜய் சந்திப்பு!

மேலும் குறைந்த தங்கம் விலை… மகிழ்ச்சியில் மக்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share