சபாநாயகரின் வாயடைத்த ராகுல்

Published On:

| By Selvam

நாடாளுமன்ற மக்களவையில் இன்று (ஜூலை 1) குடியரசு தலைவர் மீதான உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, நீட் தேர்வு, அக்னிபத் திட்டம், விவசாயிகள் பிரச்சனை உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து பேசினார்.

தொடர்ந்து, “மோடி, பாஜக, ஆர்.எஸ்.எஸ் மட்டுமே ஓட்டுமொத்த இந்து சமுதாயம் அல்ல. பிரதமர் மோடிக்கு பகவான் நேரடியாக மெசேஜ் செய்கிறார்” என்று கடுமையாக தாக்கி பேசினார். ராகுலின் பேச்சுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் எழுந்து நின்று பதிலளித்தனர்.

ADVERTISEMENT

ஒருகட்டத்தில் சபாநாயகரை அட்டாக் செய்த ராகுல் காந்தி, “சபாநாயகர் என்பது நாடாளுமன்றத்தின் மிக உயர்ந்த பதவி. மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா பதவியேற்கும் போது நான் கைகுலுக்கி வாழ்த்து தெரிவிக்கையில் நிமிர்ந்து நேராக நின்றார். அதேவேளையில், பிரதமர் மோடி கைகுலுக்கியபோது குனிந்து நின்று வணக்கம் செலுத்தினார்” என்று தெரிவித்தார்.

இதற்கு ஓம் பிர்லா, “பெரியவர்கள் முன்பாக குனிந்து நின்று வணங்குவது எங்கள் கலாச்சாரத்தின் ஓர் அங்கம்” என்று ராகுலுக்கு பதிலளித்தார்.

ADVERTISEMENT

அப்போது ராகுல் காந்தி, “உங்கள் மரியாதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இந்த அவையில் உங்களை விட பெரியவர்கள் யாரும் இல்லை. உங்களை நாங்கள் அனைவரும் கண்டிப்பாக தலைவணங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

மக்களவையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி எழுந்து நின்று பதில் சொன்னது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

படமா இது? – ‘தங்கலான்’ பார்த்து மெர்சலான ஜி.வி.பிரகாஷ்

“நீட் தேர்வு பணக்கார மாணவர்களுக்கானது” – மக்களவையில் சீறிய ராகுல்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share